உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கர்நாடக மத்திய பல்கலை பணி நியமனத்தில் முறைகேடு

 கர்நாடக மத்திய பல்கலை பணி நியமனத்தில் முறைகேடு

பெங்களூரு: கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பணி நியமனத்தில் முறைகேடு நடந்து உள்ளதாக தலைமை செயலர் ஷாலினி, மத்திய உயர்கல்வி செயலர் வினித் ஜோஷிக்கு கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பணி நியமனத்தில் முறைகேடு நடந்து உள்ளது. அங்கீகரிக்கப்படாத செய்தித்தாள் நிறுவனத்தில் பணியாற்றியதாக கூறி சிலர் அனுபவ சான்றிதழ்கள் சமர்ப்பித்து உள்ளனர். எனவே, மக்கள் தொடர்பு அதிகாரி பணி நியமனம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அப்போது, தான் உண்மை வெளிவரும். கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள நிர்வாக குழு கூட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட வேண்டும். அடுத்து நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்து துணை வேந்தர் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை