உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஸ்விக்கி தலைமையகம் மாற்றம் மோசமான சாலை காரணமா?

 ஸ்விக்கி தலைமையகம் மாற்றம் மோசமான சாலை காரணமா?

பெங்களூரு: ஸ்விக்கி நிறுவனம், தன் தலைமை அலுவலகத்தை பெல்லந்துாரில் இருந்து ஒயிட்பீல்டிற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்கு பெல்லந்துார் பகுதியில் உள்ள மோசமான சாலைகளே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனமான 'ஸ்விக்கி'யின் தலைமை அலுவலகம், பெல்லந்துாரில் உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக இங்கு இயங்கி வருகிறது. இங்கு டெண்டர் முடிவடைவதால், தன் நிறுவனத்தின் தலைமையகத்தை ஒயிட்பீல்டில் உள்ள 'சுமத்ரா கேபிடல் டவர்சில்' மாற்ற முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெல்லந்துாரில் தலைமையகமாக கொண்டு செயல்பட்ட 'பிளாக்பக்', 'யபாஜி' போன்ற நிறுவனங்கள், சாலை வசதி மோசமாக இருப்பதால், தங்கள் அலுவலகத்தை இடமாற்றம் செய்தன. இந்நிலையில், ஸ்விக்கி தன் அலுவலகத்தை இடமாற்றம் செய்ததற்கும் சாலை வசதி மோசமாக இருப்பதே காரணம் என, தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை