உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாயமான கடற்படை மாலுமி பாக்.,குடன் தொடர்பில் உள்ளாரா?

 மாயமான கடற்படை மாலுமி பாக்.,குடன் தொடர்பில் உள்ளாரா?

கார்வார்: கதம்பா கடற்கரையில், மாலுமியாக பணியாற்றிய நபர், மர்மமான முறையில் காணாமல் போனார். இவர், பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆந்திரா மாநிலம், அனந்தப்பூர் மாவட்டத்தின், ஹுன்டிமட்டி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார், 28. இவர் உத்தர கன்னட மாவட்டத்தின், கார்வாரின், கதம்பா கடற்படையில் மாலுமியாக பணியாற்றுகிறார். இவர் ஆகஸ்ட் 27ம் தேதியன்று, பணிக்கு வந்திருந்தார். ஆனால் மதியம் 2:00 மணிக்கு மர்மமான முறையில் காணாமல் போனார். அவரை பல இடங்களில் தேடியும், எங்கும் தென்படவில்லை. எனவே, கார்வார் ஊரக போலீஸ் நிலையத்தில், கடற்படை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் அவரை தேடுகின்றனர். பாகிஸ்தானின் உளவுப்படையினர், கார்வாரின் கதம்பா கடற்படை அதிகாரிகள், ஊழியர்களை பெண்களால் கவர்ந்து, பின், அவர்களை மிரட்டி கடற்படை தொடர்பான, ரகசிய தகவல்களை பெற்றுக்கொண்டனர். இது குறித்து, கடந்த இரண்டு ஆண்டுகளில், இதே கடற்படையின், நான்கு ஊழியர்களை இந்திய உளவுத்துறை கைது செய்தது. தற்போது கடற்படையில், மாலுமியாக பணியாற்றிய தினேஷ்குமார், மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். இவர் பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்