மேலும் செய்திகள்
11 மாத சிறுத்தை குட்டி, புலி வேட்டையில் பலி
17-Aug-2025
பெங்களூரு: ஷூ வுக்குள் ஒளிந்திருந்த பாம்பு கடித்து சாப்ட்வேர் இன்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம், பெங்களூரு, பன்னர்கட்டாவிலுள்ள ரங்கநாதன் லே-அவுட்டைச் சேர்ந்தவர் மஞ்சு பிரகாஷ், 41; சாப்ட்வேர் இன்ஜினியராக இவர், டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன் தினம் அருகிலுள்ள கரும்புக்கடைக்கு சென்று ஜூஸ் வாங்கி வந்த இவர், சோர்வாக இருப்பதாக கூறி படுக்கை அறைக்கு சென்றுவிட்டார். நீண்டநேரமாகியும் கண்விழிக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் எழுப்பி பார்த்தனர். வாயில் நுரை தள்ளியதால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, மஞ்சு பிரகாஷ் அணிந்து சென்றிருந்த ஷூ, ராக்கிற்கு கீழே தலைகீழாக கிடந்ததையும், அருகில் குட்டி பாம்பு இறந்து கிடந்ததையும் குடும்பத்தினர் கண்டனர். போலீஸ் விசாரணையில், பாம்புடன் கூடிய ஷூவை அணிந்து சென்றதால் உள்ளேயிருந்த பாம்பு கடித்து மஞ்சு பிரகாஷ் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்தது; தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
17-Aug-2025