உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாநில காங்., அரசுக்கு ஜெயின் துறவி எச்சரிக்கை

மாநில காங்., அரசுக்கு ஜெயின் துறவி எச்சரிக்கை

ஹூப்பள்ளி: ‘‘அடுத்த, 10 நாட்களுக்குள் ஜெயின் மேம்பாட்டு கழகத்தை மாநில அரசு அமைக்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன்,’’ என, ஜெயின் சமூக துறவியான ஆச்சார்யா ஸ்ரீ குணதரநந்தி மஹாராஜ் எச்சரித்து உள்ளார். ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில், 20 லட்சம் ஜெயின் சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் உள்ளனர். ஜெயின் மேம்பாட்டுக் கழகம் அமைக்க வேண்டுமென மாநில அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்து உள்ளோம். இருப்பினும், எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஜெயின் துறவிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஜெயின் துறவிகள் பாதயாத்திரை மேற்கொள்ளும் போது, அவர்கள் இரவு அரசு பள்ளிகளில் தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் அடுத்த 10 நாட்களுக்குள் நிறைவேற்றப்படா விட்டால், பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதா முன் உணவு, தண்ணீர் அருந்தாமல் சாகும் வரை போராட்டம் நடத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

naveen ahamed
அக் 30, 2026 09:02

ஏற்க்கனவே, தண்ணீர், குடிக்காமல், உணவு, அருந்தமல், உயிர், வாழ்கிறீர்கள், ஏதாவது, அற்புதம், செய்து, உங்கள், கோரிக்கை, நிறை வேற்றி, கொள்ளுங்கள், அய்யா


முக்கிய வீடியோ