உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாநில விளையாட்டு போட்டியாக கம்பாலா?

மாநில விளையாட்டு போட்டியாக கம்பாலா?

பெங்களூரு : கம்பாலாவை மாநில விளையாட்டு போட்டியாக தேர்வு செய்யமாநில அரசு முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று கம்பாலா. இது, வெறும் விளையாட்டு மட்டுமல்ல; மாறாக கர்நாடகாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த கம்பாலாவை, மாநில விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதன் மூலம் மற்ற விளையாட்டுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கம்பாலாவுக்கும் கிடைக்கும். மாநிலம் முழுதும் கம்பாலா விரிவடையும். இந்நிலையில், கம்பாலாவை மாநில விளையாட்டாக அறிவிக்க, மாநில அரசு முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விதிகள், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க தொகை, சிறப்பு மானியங்கள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை