உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரு கலெக்டராக காந்தராஜு நியமனம்

 பெங்களூரு கலெக்டராக காந்தராஜு நியமனம்

பெங்களூரு: பெங்களூரு நகர கலெக்டராக இருந்த ஜெகதீஷ் மாற்றப்பட்டுள்ளார். புதிய கலெக்டராக காந்தராஜுவை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் புதிய முதல்வராக சிவகுமார் பொறுப்பேற்ற பின், நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிக ள் இடமாற்றம் நடக்கிறது. தற்போது நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் புதிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து நிர்வா க சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெங்களூரு நகர கலெக்டராக இருந்த ஜெகதீஷ், பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக பணியாற்றிய காந்தராஜு, பெங்களூரு நகர கலெக்டராக இனி பணியாற்றுவார். தகவல் தொழில்நுட்ப துறை செயலர் மஞ்சுளா, பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், கர்நாடக மின் பகிர்மான நிறுவன கழகத்தின் நிர்வாக இயக்குனராக இனி பணியாற்றுவார். ராம்பிரசாத் மனோகர் தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். கர்நாடக மின் பகிர்மன நிறுவன கழக நிர்வாக இயக்குனர் பொறுப்பை அவர் கூடுதலாக கவனித்து வந்த நிலையில், தற்போது அந்த பொறுப்பிற்கு முழு நேரமாக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலம் முழுதும் சீரான மின்சாரம் கிடைக்கும் வகையில் அவருக்கு முக்கிய பொறுப்பை, முதல்வர் ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !