உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவக்கம்

கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவக்கம்

பெங்களூரு: பெங்களூரு விதான் சவுதாவில், கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. கர்நாடக சட்டசபை ஆண்டிற்கு நான்கு முறை கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர், பட்ஜெட், மழைக்கால, குளிர்கால கூட்டத்தொடர் நடக்கிறது. இந்த ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான் சவுதாவில் இன்று முதல் 22 ம் தேதி வரை நடக்கிறது. இன்று காலை 11:00 மணிக்கு கூட்டத்தொடர் துவங்குகிறது. கடந்த முறை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, சபையில் அநாகரிகமாக நடந்து கொண்ட 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின், சஸ்பெண்ட் வாபஸ் பெறப்பட்டது. இதுதொடர்பான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட உள்ளது. தற்போது மாநிலத்தில் பெய்து வரும் மழையால் நிறைய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள உரம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். உரம் விஷயத்தில் அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. சின்னசாமி மைதானம் முன்பு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு நிதி ஒதுக்காதது, தேர்தலில் ஓட்டு திருட்டு என்ற ராகுலுக்கு பதிலடி கொடுப்பது உட்பட பல பிரச்னைகளை முன்வைத்து, அரசுக்கு எதிராக போராட எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. சட்டசபையில் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவது தொடர்பாக, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை