அமெரிக்காவில் உச்சி மாநாடு கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்பு
பெங்களூரு: அமெரிக்காவில் நடக்கும் சட்டசபை உச்சி மாநாடு - 2025ல், கர்நாடக மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.அமெரிக்காவின் பாஸ்டனில் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை, மூன்று நாட்கள் சட்டசபை உச்சி மாநாடு - 2025 நடக்க உள்ளது. உலகம் முழுதும் இருந்து எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், அரசியல் நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரசியல் ராஜதந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.கர்நாடகாவில் இருந்து மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, துணை தலைவர் பிரானேஷ், மேல்சபை ஆளுங்கட்சி தலைவரான அமைச்சர் போசராஜு, எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, கொறடாக்கள் ஆளுங்கட்சி சலீம் அகமது, எதிர்க்கட்சி ரவிகுமார், எம்.எல்.சி.,க்கள் பாரதி ஷெட்டி, பில்கிஸ் பானு, ஹேமலதா நாயக், மஞ்சுநாத் பண்டாரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.