உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பஸ் கட்டண உயர்வுக்கு கமிட்டி கர்நாடக அரசு அதிரடி முடிவு

பஸ் கட்டண உயர்வுக்கு கமிட்டி கர்நாடக அரசு அதிரடி முடிவு

பெங்களூரு: கர்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையம் போன்று, போக்குவரத்துக் கழகங்களின் பஸ் டிக்கெட் கட்டண உயர்வை நிர்ணயிக்க, கமிட்டி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்துக்கழக பஸ்களின் நிர்வகிப்பு செலவு அதிகரிக்கிறது. 2014ல் அன்றாட நிர்வகிப்பு செலவு ஏழு கோடி ரூபாயாக இருந்தது. 2025ல் இது 13 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஊழியர்களுக்கான செலவும் அதிகரிக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, பயணியருக்கு சுமை ஏற்படாத வகையில், டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மின் கட்டண உயர்வு தொடர்பாக முடிவு செய்ய, கர்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையம், கமிட்டி அமைத்துள்ளது. அதே போன்று போக்குவரத்துக்கழக பஸ்களின் டிக்கெட் கட்டணத்தை முடிவு செய்ய, பொது போக்குவரத்துக்கழக பஸ்கள் பயண கட்டண கட்டுப்பாட்டு கமிட்டி அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இந்த கமிட்டியில், அரசின் ஓய்வு பெற்ற தலைமை செயலரோ அல்லது கர்நாடக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியோ தலைவராக இருப்பார். இரண்டு உறுப்பினர்கள் இருப்பர். சட்ட வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்கள் இருப்பர். கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குநர், கமிட்டி செயலராக இருப்பார். கமிட்டி, போக்குவரத்துக் கழகங்களின் பொருளாதார சூழ்நிலையை ஆய்வு செய்து, கால காலத்துக்கு கட்டண உயர்வுக்கு சிபாரிசு செய்யும். கமிட்டி சிபாரிசுகளின் பிரதிகள், சட்டசபை, மேல்சபைகளில் தாக்கல் செய்யப்படும். அதன்பின் கட்டண உயர்வு குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை