உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நவம்பரில் கெம்பேகவுடா விழா

நவம்பரில் கெம்பேகவுடா விழா

மாகடி : ''பெங்களூரை உருவாக்கிய கெம்பேகவுடாவின் விழா, நவம்பரில் மாகடியில் கொண்டாடப்படும்,'' என்று, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் கூறினார். மாகடியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பெங்களூரு நகரம், இன்று உலக அளவில் பெயர் பெற்று உள்ளது. பெங்களூரை உருவாக்கிய கெம்பேகவுடா தான், இதற்கு முழு காரணம். அவருக்கு மரியாதை செல்லும் விதமாக, நவம்பரில் கெம்பேகவுடா விழா மாகடியில் கொண்டாடப்படும். தேதியை விரைவில் அறிவிப்போம். மாகடி கோட்டை 103 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். பிடதியில் டவுன்ஷிப் கட்டப்படும். நிலத்திற்காக விவசாயிகளுடன் பேசுவோம். தற்போது 'பாமுல்' எனும் பெங்களூரு பால் கூட்டமைப்பு தலைவராக உள்ளேன். விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன். கே.எம்.எப்., தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை