உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கேரளம் ஸ்டைல் குடம்புளி மீன் குழம்பு

 கேரளம் ஸ்டைல் குடம்புளி மீன் குழம்பு

- நமது நிருபர் -: இந்த வாரம் வீட்டில் கேரளம் ஸ்டைல் குடம்புளி மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாமா. தேவையான பொருட்கள்: l மீன் - அரை கிலோ l சின்ன வெங்காயம் - 150 கிராம் l தேங்காய் எண்ணெய் - அரை கப் l வெந்தயம் - கால் தேக்கரண்டி l பச்சை மிளகாய் - 2 l பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி l பொடியாக நறுக்கிய பூண்டு - 1 மேஜை கரண்டி l கறிவேப்பிலை - 10 இலைகள் l பெரிய துண்டு தேங்காய் - 2 l நாட்டு தக்காளி - 2 l மிளகாய் துாள் - 1 மேஜை கரண்டி l காஷ்மீரி மிளகாய் துாள் - 1 மேஜை கரண்டி l மல்லித்துாள் - 1.5 மேஜை கரண்டி l மஞ்சள் துாள் - அரை தேக்கரண்டி l குடம்புளி - 4 துண்டு l தண்ணீர், உப்பு - தேவையான அளவு செய்முறை குடம்புளியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். கல் சட்டியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்தவும். வெந்தயம், கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் மிளகாய் துாள், மஞ்சள் துாள், மல்லி துாள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். குடம்புளியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய குடம்புளி தண்ணீரை குழம்பிற்கு உபயோகப்படுத்த வேண்டாம். வெறும் புளியை, வதக்கிய வெங்காயத்தில் சேர்த்து, ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடங்கள் லேசான தீயில் கொதிக்க விடவும். தேங்காய் மற்றும் தக்காளியை நறுக்கி, மிக்சியில் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த விழுதை சட்டியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும். இப்பொழுது மீன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு லேசான தீயில் மீன் வேகும் வரை வேக வைக்கவும். இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்தால், கேரளம் முறையில் குடம்புளி மீன் குழம்பு தயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !