உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தைராய்டு புற்றுநோயால் கே.ஜி.எப்., நடிகர் மறைவு

தைராய்டு புற்றுநோயால் கே.ஜி.எப்., நடிகர் மறைவு

பெங்களூரு: கே.ஜி.எப்., திரைப்படத்தில் நடித்த ஹரிஷ் ராய் தைராய்டு புற்றுநோயால் காலமானார். பெங்களூரை சேர்ந்தவர் ஹரிஷ் ராய், 55. 'ஓம்' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர். இப்படத்தின் வெற்றிக்கு பின், பல கன்னட படங்களில் தோன்றிய ஹரிஷ் ராய், வில்லன், துணை வேடங்களில் நடித்து வந்தார். கன்னடம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வந்தார். நடிகர் யஷ் நடிப்பில் உலகளவில் பெரிய வெற்றி பெற்ற கே.ஜி.எப்., படித்தில், அவருடன், 'சாச்சா' வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்துடன், இவரின் புகழ் மேலும், அதிகரித்தது. இந்நிலையில், 2022ல் இவருக்கு நான்காம் நிலை, 'தைராய்டு' புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு பொருளாதார வசதி இல்லாததால், சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டார். சமீபத்தில், வீடியோ மூலம், நிதியுதவி கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பலரும் நிதியுதவி வழங்கியிருந்தனர். கடந்த சில மாதங்களாக அவரின் நிலை மோசமடைந்தது. பெங்களூரு கித்வாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் உள்ளனர். இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை