உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹாசனாம்பா கோவிலில் சிவகுமார் வலது புறத்தில் பூ விழுந்ததால் குஷி

ஹாசனாம்பா கோவிலில் சிவகுமார் வலது புறத்தில் பூ விழுந்ததால் குஷி

வலதுபுறம் பூ விழுந்ததால் சிவகுமார் குஷி துணை முதல்வர் சிவகுமார், நேற்று முன் தினம் இரவு, தன் மனைவி உஷாவுடன் ஹாசனுக்கு சென்று, ஹாசனாம்பாவை தரிசனம் செய்தார். அம்பாள் முன்பாக அமர்ந்து, தம்பதி சமேதராக சிறப்பு பூஜைகள் நடத்தினர். அப்போது சிவகுமார், நாராயணி நமஸ்காரம், கட்கமாலா மந்திரத்தை பாராயணம் செய்தார். சிவகுமார் பூஜை செய்யும்போது, அம்பாளின் வலதுபுறத்தில் இருந்து, இரண்டு முறை பூ விழுந்தது. இது சுப சகுனத்தின் அடையாளம் என, பக்தர்கள் கூறுகின்றனர். மாநிலத்தி ல் நடப்பாண்டு இறுதியில், முதல்வர் மாற்றம் நிகழும் என, காங்கிரசாரே கூறுகின்றனர். சிவகுமாருக்கு முதல்வராகும் வாய்ப்புகள் அதிகம். இத்தகைய சூழ்நிலையில், அம்பாளின் வலதுபுறம் இருந்து பூ விழுந்து, ஆசி கூறியதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் சிவகுமார் மகிழ்ச்சி அடைந்துள்ளார். பானு முஷ்டாக் தரிசனம் எழுத்தாளர் பானு முஷ்டாக், ஹாசனுக்கு நேற்று காலை வருகை தந்தார். ஹாசனாம்பாவை தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பின், அவர் அளித்த பேட்டி: ஹாசனின், ஹாசனாம்பா தேவியின் ஆராதனை, மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது. கோவில் திறந்த ஆறாவது நாளன்று, ஹாசனாம்பாவை தரிசித்தது, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாட்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்பது, என் மனதுக்கு அமைதியை தந்துள்ளது. நான் சிறுமியாக இருந்தபோது, என் தாயின் கை விரலை பிடித்துக் கொண்டு, ஹாசனாம்பாவை தரிசிக்க வந்தது, இன்று என் நினைவுக்கு வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை