உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நந்தினி பிராண்டில் கலப்படம் கே.எம்.எப்., எச்சரிக்கை

நந்தினி பிராண்டில் கலப்படம் கே.எம்.எப்., எச்சரிக்கை

பெங்களூரு: 'நந்தினி' உற்பத்திப் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்கும் நோக்கில், கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, வாரந்தோறும் நந்தினி உற்பத்திகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, கே.எம்.எப்., தலைவர் சிவசாமி கூறியதாவது: மாண்டியா, மைசூரு, துமகூரு மாவட்டங்களில், நந்தினி உற்பத்திகளில் கலப்படம் செய்வது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை தடுக்க கே.எம்.எப்., நடவடிக்கை எடுத்துள்ளது. கே.எம்.எப்.,பின் அதிரடி படை, மாநிலம் முழுவதும் செயல்படுகிறது. நந்தினி 'பிராண்டிங்' தவறான முறையில் பயன்படுத்தப்படுவதை, அதிரடி படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மார்க்கெட்டில் நந்தினி உற்பத்திகளுக்கு, அதிகமான டிமாண்ட் உள்ளது. எனவே 'நந்தினி' பெயரை பயன்படுத்தி, தனி நபர்கள் போலியான உற்பத்திகளை விற்கின்றனர். மைசூரில் நந்தினி நெய் கலப்படம் செய்யப்பட்டதை, கே.எம்.எப்., அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதை கட்டுப்படுத்த கே.எம்.எப்., முடிவு செய்துள்ளது. உணவு பாதுகாப்பு துறையுடன் கைகோர்த்து, மாநிலம் முழுதும் 890 இடங்களில் நந்தினி உற்பத்திகளின் மாதிரிகள் பெற்று, ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்தது. இனி வாரந்தோறும் நந்தினி உற்பத்திகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. நந்தினி பெயரை தவறாக பயன்படுத்தினால், கடுமையான நடவடிக்கை எடுக்க கே.எம்.எப்., முடிவு செய்துள்ளது. கலப்படம் இருந்தால் பொது மக்கள் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை