எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., இலவச சலுகை
பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் மாணவர்கள், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம். கே.எஸ்.ஆர்.டி.சி., அறிக்கை: கர்நாடகாவில் வரும் 18ம் தேதி முதல் ஏப்., 2ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடக்கிறது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் எந்தவித பதற்றமும் இல்லாமல் சென்றடையும் வகையில் கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்வு துவங்கிய நாளில் இருந்து நகரம், துணை நகரம், சாதாரண, விரைவு பஸ்களில் மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை காட்டினாலே போதும். இலவசமாக அழைத்து செல்லப்படுவர். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.