கூலி தொழிலாளி அடித்து கொலை
சீனிவாசப்பூர்: கோலார் மா வட்டம், சீனிவாசப்பூர் கூலகுர்கி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தப்பா, 45. இவர் கட்டட மே ஸ்திரி ஆஞ்சப்பா, 48, என்பவரிடம் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு கூலித் தொகை, 3,000 ரூபாயை, மேஸ்திரி ஆஞ்சப்பா கொடுக்க வேண்டி இருந்தது. வசந்தப்பா கேட்டார். குடிபோதையில் இருந்த ஆஞ்சப்பா, 48, அவருடன் இருந்த திம்மராயப்பா, 42, ஆகியோர் வசந்தப்பாவிடம் நேற்று தகராறு செய்தனர். தடியால் தாக்கி உள்ளனர். தலையில் பலத்த காயம் அடைந்த வசந்தப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திம்மராயப்பா கைது செய்யப்பட்டார். ஆஞ்சப்பாவை தேடி வருகின்றனர்.