உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நீதிபதிகள் சொத்து விபரம்; வக்கீல் சங்கம் கோரிக்கை

நீதிபதிகள் சொத்து விபரம்; வக்கீல் சங்கம் கோரிக்கை

பெங்களூரு : 'உச்ச நீதிமன்ற நீதிபதிகளை போன்று, கர்நாடகாவிலும் நீதிபதிகளின் சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும்' என, பெங்களூரு வக்கீல்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, பெங்களூரு வக்கீல்கள் சங்கம் எழுதியுள்ள கடிதம்:உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போல, மாநிலத்தின் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும், தங்களின் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும். நீதித்துறை வெளிப்படையாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தங்களின் சொத்துகளை அறிவிக்க முடிவு செய்துள்ளனர். தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் நடந்த கூட்டத்தில், இத்தகைய மகத்துவமான முடிவு எடுக்கப்பட்டது. அதேபோன்று கர்நாடகாவிலும், நீதிபதிகள் சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை