பைக்கில் சென்ற தம்பதி மீது பாய்ந்த சிறுத்தை
மைசூரு: மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடின் சுன்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஹாதேவசாமி. இவர் தனது மனைவி, குழந்தையுடன் நேற்று காலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோர பு தரில் இருந்து திடீரென வெளியே வந்த சிறுத்தை, இவர்கள் மீது பாய்ந்தது. கீழே விழுந்தவர்களை கடித்தது. இதை பார்த்த அப்பகுதியினர் கூச்சலிட்டபடி ஓடி வந்தனர். உடன், சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது. படுகாயம் அடைந்த மூவரும், மைசூரு கே.ஆர்., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மனிதர்களை தாக்கும் சிறுத்தையை பிடிக்கும்படி, வனத்துறையினரை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.