உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காதல் ஜோடி தற்கொலை

காதல் ஜோடி தற்கொலை

மைசூரு: மைசூரு அருகே, விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை செய்தனர். மைசூரு கே.ஆர்.நகர் தொட்டகவுடன கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ், 18. இன்ஜினியரிங் மாணவர். இவர், மைசூரு ஹெப்பால் பகுதியை சேர்ந்த பிரியங்கா, 16, என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. கடந்த 12ம் தேதி தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிரியங்கா, பின், வீடு திரும்பவில்லை. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை, மைசூரு தாலுகா குங்கரசத்திரா கிராமத்தில் உள்ள தோட்டத்தில் சந்தோஷ், பிரியங்கா இறந்து கிடந்தனர். அவர்கள் பக்கத்தில் விஷம் அடங்கிய பாட்டில் கிடந்தது. முதற்கட்ட விசாரணையில் இருவரும், விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ