கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் லாபம் என கூறிய மதுரை நபர் கைது
தாவணகெரே: 'கிரிப்டோகரன்சி எனும் மெய்நிகர் பணத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்' என, பொது மக்களை ஏமாற்றி பண மோச டி செய்த, மதுரையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தாவணகெரே டவுனில் வசிப்பவர் சாதிக்; பழ வியாபாரி. இவர், கடந்த மாதம் 4ம் தேதி தாவணகெரே சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், 'எனக்கு அறிமுகம் ஆன நான்கு பேர் கூறியதால், கிரிப்டோகரன்சியில், 50,000 ரூபாய் முதலீடு செய்தேன். 'லாபம் கிடைக்கும் என்று கூறினர். ஆனால் பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர்' என கூறி இருந்தார். இந்த புகாரின்படி போலீ சார் விசாரணை நடத்தியதில், தமிழகத்தின் மதுரையை சேர்ந்த செல்லபாண்டி சுப்பிரமணியன், 42, மற்றும் அவரது குழுவினர், கிரிப்டோகரன்சியில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி, தாவணகெரே மாவட்டத்தில், 3,000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி, பண மோசடி செய்தது தெரிந்தது. தலைமறைவாக இருந்த செல்லபாண்டி உட்பட ஐந்து பேரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் மதுரையில் செல்லபாண்டியை கைது செய்தனர். பெங்களூரு அழைத்து வரப்படு ம் அவரிடம் விசாரணை தொடர்ந்து நடக்க உள்ளது.