உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மஹாதேவப்பா சர்ச்சை பேச்சு பா.ஜ., அசோக் பதிலடி

மஹாதேவப்பா சர்ச்சை பேச்சு பா.ஜ., அசோக் பதிலடி

பெங்களூரு: 'அயோத்தி ராமர் வேறு; வால்மீகி ராமர் வேறு' என கூறிய அமைச்சர் மஹாதேவப்பாவுக்கு; சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் பதிலடி கொடுத்துள்ளார்.தாவணகெரேயில் நேற்று முன்தினம் நடந்த வால்மீகி திருவிழாவில், சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா பேசுகையில், 'வால்மீகியை நாம் அனைவரும் அறிவோம். உலகின் தலைசிறந்த கவிதைகளில் ஒன்றான ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி. வால்மீகி எழுதிய ராமரும்; அயோத்தியில் உள்ள ராமரும் வேறு. இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன.'ராமரில் இருந்து வால்மீகி தோன்றினாரா அல்லது வால்மீகியில் இருந்து ராமர் தோன்றினாரா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ராமரை படைத்தவர் வால்மீகி' என்று கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக்கின், 'எக்ஸ்' பதிவு:அமைச்சர் மஹாதேவப்பா அவர்களே, ஹிந்துக்களின் ஒற்றுமையையும், கொண்டாட்டத்தையும் பார்த்து உங்களுக்கு ஏன் இவ்வளவு பொறாமை. பண்டைய கவிஞர் மகரிஷி வால்மீகியின் ஸ்ரீராமர், அயோத்தி ஸ்ரீ ராமரிடம் இருந்து வேறுபட்டவர் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்.அப்படியானால் தேசிய கவிஞர் குவெம்புவின் 'ஸ்ரீராமாயண தரிசனம்' படைப்பில் வரும் ராமர் யார்? வால்மீகி ராமரா அல்லது அயோத்தி ராமரா? ஹிந்துக்களின் ஒற்றுமையை உடைத்து, பிளவுகளை உருவாக்கும் உங்களின் கம்யூனிச சித்தாந்தங்களுக்கு புதிய இந்தியாவில் இடமில்லை.இடதுசாரி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட இதுபோன்ற புனையப்பட்ட கதைகள், கட்டுக் கதைகளை யாரும் நம்ப போவதில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக, ஹிந்துக்களின் பக்தி, நம்பிக்கையுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை