உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வர் சந்திப்பு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை

 மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வர் சந்திப்பு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை

பெங்களூரு: கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பெங்களூரில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்துக்கு நேற்று சென்ற அமைச்சர் பரமேஸ்வர், நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.பின், பரமேஸ்வர் அளித்த பேட்டி: மரியாதை நிமித்தமாக காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க வந்தேன். எனக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே, அரசியலை தாண்டி நல்லுறவு உள்ளது. அவரை சந்தித்து பேசிய போது, அரசியல் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை, அவரது கவனத்துக்கு கொண்டு சென்றேன். கலபுரகியில் குடிநீர் பிரச்னை உள்ளது. அதற்கு தீர்வு காண, இம்முறை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும்படி, முதல்வர் சித்தராமையாவிடம் வேண்டுகோள் விடுத்தேன். இதைப்பற்றி கார்கேவிடமும் தெரிவித்தேன். இதுதவிர அரசியல் குறித்து, வேறு எதுவும் ஆலோசிக்கவில்லை. முக்கிய திட்டங்கள் தொடர்பாக பேசினோம். இம்முறை மத்திய அரசின் பட்ஜெட்டில், கர்நாடகாவுக்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஜி.எஸ்.டி., வசூலில், மாநிலத்துக்கு நியாயமான பங்கை வழங்க வேண்டும் என, ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். குழாய் மூலம் வீடு வீடாக குடிநீர் வினியோகிக்கும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் செலவில், 50 சதவீதம் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். இந்த திட்டத்துக்கு மாநில அரசு அதிகம் செலவிடுகிறது. பத்ரா மேலணை திட்டத்துக்கு, 5,300 கோடி ரூபாய் வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவித்தனர். இதுவரை அந்த தொகை வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை