உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முதியவரை ஏமாற்றி செயின் பறித்தவர் கைது 

 முதியவரை ஏமாற்றி செயின் பறித்தவர் கைது 

சர்ஜாபூர்: முதியவர் கவனத்தை திசை திருப்பி, தங்க செயினை பறித்தவர் கைது செய்யப் பட்டுள்ளார். பெங்களூரு ரூரல் சர்ஜாபூர் வி.கல்லஹள்ளியில் வசிப்பவர் குல்லப்பா, 65. கடந்த மாதம் 21ம் தேதி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அங்கு வந்த ஒருவர் குல்லப்பாவிடம் நைசாக பேச்சு கொடுத்தார். வயதாகி விட்டதால் உங்களை பத்திரமாக அழைத்து சென்று வீட்டில் விடுகிறேன் என்று கூறினார். குல்லப்பாவின் கையை பிடித்து மெதுவாக அழைத்து சென்றார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது, குல்லப்பாவின் கவனத்தை திசை திருப்பி அவர் கழுத்தில் அணிந்திருந்த 40 கிராம் தங்க செயினை பறித்துவிட்டு தப்பினார். குல்லப்பா அளித்த புகாரில், அந்த நபரை சர்ஜாபூர் போலீசார் தேடினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், பனஹள்ளி கிராமத்தின் மோகன், 38, நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து குல்லப்பாவின் தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது. வேறு யாரிடமாவது இது போன்று நகையை பறித்து சென்றாரா என விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை