மேலும் செய்திகள்
எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது
17-Mar-2025
மாகடி ரோடு: வாகன சோதனையின் போது, போலீசார் மீது கார் ஏற்றி விட்டு தப்பி சென்றவர் கைது செய்யப்பட்டார்.ராஜாஜி நகர் வெஸ்ட் ஆப் கார்டு சாலையில், கடந்த 3ம் தேதி, மாகடி ரோடு போலீசார் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு கார் வந்துள்ளது.அந்த காரை போலீசார் சோதனை செய்வதற்காக நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அந்த காரை ஓட்டிய நபர், காரை நிறுத்தாமல், பணியில் இருந்த இரு போலீசார் மீதும், போலீஸ் வாகனத்தின் மீதும் மோதிவிட்டு தப்பி சென்றார். இதில், போலீசார் காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து, மாகடி ரோடு போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். போலீசார் மீது காரை ஏற்றி தப்பி சென்ற மகாதேவ் சாமி எனும் ராமச்சாரி, 32, நேற்று கைது செய்யப்பட்டார். அவர் காரும் பறிமுதல் செய்யப்பபட்டது.
17-Mar-2025