மேலும் செய்திகள்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025
பெங்களூரு: 'பப்', 'கிளப்'கள், சாலையில் நடந்து செல்லும் இளம்பெண்களை வீடியோவாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் இரவு நேரத்தில் நகரின் கோரமங்களா, சர்ச் சாலை, இந்திரா நகர் உட்பட பல இடங்களில் பப்கள், பார்கள் இயங்குகின்றன.இங்கு வரும் இளம்பெண்கள், மது அருந்திவிட்டு, தங்கள் நண்பர்களுடன் ஜாலியாக நடனமாடுவதும், போஸ் கொடுப்பதும் சகஜம்.இதை ஒருவர், தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் பின்னணி இசையுடன் ரீஸ்லாக வெளியிட்டு வந்தார்.சமூக வலைதளங்கள் மூலம் இதை பார்த்த, சம்பந்தப்பட்ட இளம்பெண்கள், போலீசில் புகார் செய்தனர். அதேவேளையில், சைபர் கிரைம் பிரிவில் இருந்து வந்த தகவலை அடுத்து, பனசங்கரி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில் கே.ஆர்.,புரத்தை சேர்ந்த குருதீப் சிங், 26, என்பவரை போலீசார் கைது செய்தனர். மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்த இவர், வேலை எதுவும் இல்லாமல், தனது சகோதரனுடன் வசித்து வருகிறார்.இதற்கிடையில், முதல்வர் சித்தராமையா தனது 'எக்ஸ்' பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:கர்நாடகாவில் இதுபோன்ற செயல்களுக்கு இடமில்லை. சமீப நாட்களாக இதுபோன்று பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. இத்தகையவர்களை எங்கள் அரசு கைது செய்து வருகிறது.இச்சம்பவம் குற்றம் மட்டுமல்ல, சமுதாயத்திற்கு செய்யும் துரோகம். பெண்களின் பாதுகாப்பு, கவுரவத்திற்கு நாங்கள் முன்னுரிமை அளிப்போம்.இத்தகையவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்போம். பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், மரியாதையுடன் நடத்தக்கூடிய கர்நாடகாவை உருவாக்குவோம்.இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
24-Jun-2025