உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அறிவுரை கூறிய நபரை கத்தியால் குத்தியவர் கைது

அறிவுரை கூறிய நபரை கத்தியால் குத்தியவர் கைது

பெலகாவி : 'காதல் என்ற பெயரில், இளம்பெண்ணுடன் சுற்ற வேண்டாம்' என, அறிவுரை கூறிய நபரை கத்தியால் குத்திய இளைஞர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. பெலகாவி மாவட்டம், கித்துார் தாலுகாவில் வசிப்பவர் தர்ஷன், 25. இவர் இதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்தார். அவருடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதை அறிந்த அதே பகுதியில் வசிக்கும் மடிவாளப்பா என்பவர், இளம்பெண்ணின் பெற்றோரிடம் கூறினார். நேற்று முன் தினம், தர்ஷன், தன் காதலியை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். நேற்று காலை இவரை பார்த்த மடிவாளப்பா, 'காதல் என்ற பெயரில், இளம்பெண்ணுடன் ஊர் சுற்ற வேண்டாம். பிழைப்பை கவனி' என, புத்திமதி கூறினார். இதனால் கோபமடைந்த தர்ஷன், மடிவாளப்பா முகத்தில் மிளகாய் பொடியை வீசி, கண்மூடித்தனமாக தாக்கினார். கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த மடிவாளப்பா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மடிவாளப்பாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, கித்துார் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. தர்ஷனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை