உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  5 மாத நாய்க்குட்டியை சுட்டவர் மீது வழக்கு

 5 மாத நாய்க்குட்டியை சுட்டவர் மீது வழக்கு

மாதநாயக்கனஹள்ளி: ஐந்து மாத நாய்க்குட்டியை துப்பாக்கியால் சுட்ட நபர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது. பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா அருகில் உள்ள, மாதநாயக்கனஹள்ளியில், கன்னா லே - அவுட்டில் வசிக்கும் விலங்குகள் ஆர்வலர் ஒருவர், செப்டம்பர் 20ம் தேதியன்று, தெரு நாய்களுக்கு உணவளித்தார். அப்போது இதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி, 65, என்பவர் துப்பாக்கியால் நாய்களை சுட்டார். இதில் ஐந்து மாதமான நாய்க்குட்டியின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. இதை பார்த்த பிராணி ஆர்வலர்கள் சிந்து, சஹனா உடனடியாக நாய்க்குட்டியை, ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்கு பின் நாய்க்குட்டி உயிர் பிழைத்தது. நாய்க்குட்டியை துப்பாக்கியால் சுட்ட கிருஷ்ண மூர்த்தி மீது, மாதநாயகனஹள்ளி போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தனர். போலீசார் அவரை அழைத்து விசாரித்த போது, 'என் வீட்டின் பின் புறம் கோழி, ஆடுகள் வளர்க்கிறேன். இவைகளை தெரு நாய்கள் கடிக்கும் என்பதால், நாய்களை விரட்ட துப்பாக்கியால் சுட்டேன். நாய்க்குட்டி மீது குண்டு பாயும் என, நான் எதிர்பார்க்கவில்லை' என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். கிருஷ்ண மூர்த்தி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை