உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிறுமி பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு

 சிறுமி பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு

ஷிவமொக்கா: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, ஷிவமொக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதியை சேர்ந்த 22 வயது இளைஞர், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை, பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தார். 2022ல் தனியாக இருந்த சிறுமியை, இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, நடவடிக்கை எடுத்த பத்ராவதி ஊரக போலீசார், இளைஞரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்தனர். விசாரணையை முடித்து, ஷிவமொக்காவின் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இளைஞரின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நிங்கனகவுடா பாட்டீல், நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார். அபராத தொகை, 2.25 லட்சம் ரூபாயை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக வழங்கும்படி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை