மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை கணவர் மீது வழக்கு
06-Oct-2025
பெலகாவி :மனைவியை கொலை செய்து, கட்டிலுக்கு கீழே சடலத்தை போட்டுவிட்டு தப்பிய கணவரை, போலீசார் தேடுகின்றனர். பெலகாவி மாவட்டம், மூடலகி தாலுகாவின், கமலதின்னி கிராமத்தில் வசித்தவர் ஆகாஷ், 25. இவரது மனைவி சாக்ஷி, 20. இவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை ஆகாஷ் கொடுமைப்படுத்தியுள்ளார். ஆகாஷின் பெற்றோர் மும்பைக்கு சென்றதால், வீட்டில் தம்பதி மட்டுமே இருந்தனர். நான்கு நாட்களுக்கு முன், மனைவியுடன் ஆகாஷ் தகராறு செய்தார். அப்போது கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்தார். உடலை பெட்ஷீட்டில் சுற்றி, கட்டிலுக்கு கீழே தள்ளினார். எதுவுமே நடக்காதது போன்று இருந்தார். இதற்கிடையே மும்பையில் இருந்து, ஆகாஷின் தாய் நேற்று காலை ஊருக்கு திரும்பினார். தாய் வருவதை அறிந்த ஆகாஷ், வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். வீட்டுக்கு வந்த தாய், மகன், மருமகள் வெளியே சென்றிருக்கலாம் என நினைத்தார். மதியம் வீட்டில் ஏதோ துர்நாற்றம் வீசுவதை கவனித்தார். எங்கிருந்து வருகிறது என்று தேடியபோது கட்டிலுக்கு கீழே, மருமகளின் உ டல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், சாக்ஷி சடலத்தை மீட்டனர். ஆகாஷை தேடி வருகின்றனர்.
06-Oct-2025