மேலும் செய்திகள்
கோடை வரும் பின்னே... தர்பூசணி வந்தது முன்னே!
20-Feb-2026
பெங்களூரு: பன்னரகட்டா தேசிய பூங்காவில், விலங்குகளை வெப்பத்திலிருந்து காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இளநீர், ஜஸ் கேன்டி உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை கொடுத்து வருகின்றனர். பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மக்களை போன்று விலங்குகளும், வெப்பத்தால் அவதிப்படுகின்றன. எனவே, பன்னரகட்டா தேசிய பூங்காவில், விலங்குகளை குளிர்ச்சியாக வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். யானைகள், மான்கள், கரடிகள் என, அனதை்து விலங்குகளுக்கும், இளநீர், ஜஸ் கே ன்டி, லாலிபாப், உட்பட பல விதமான தின்பண்டங்கள் தருகின்றனர். யானைகளை குளிர்ச்சியான நீரில் குளிப்பாட்டுகின்றனர். தர்பூசணி பழங்கள் தருகின்றனர். நிழல் வசதிக்காக ஷெல்டர்கள் அமைத்துள்ளனர். குடிநீர் வசதியும் செய்துள்ளனர்.
20-Feb-2026