உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரில் நாளை  இறைச்சி விற்க தடை

 பெங்களூரில் நாளை  இறைச்சி விற்க தடை

பெங்களூரு: சர்வோதய தினத்தையொட்டி பெங்களூரில் நாளை முழுதும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கிரேட்டர் பெங்களூரு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மஹாத்மா காந்தியின் நினைவு நாளை நினைவுகூரும் வகையிலான சர்வோதய தினத்தையொட்டி நாளை பெங்களூரில் கோழிக்கறி, ஆட்டிறைச்சி, மீன் ஆகியவை எதுவும் விற்பனை செய்யக்கூடாது. இறைச்சி விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இதற்கு இறைச்சி விற்பனையாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இது, தொடர்பான சுற்றறிக்கைகள் அனைத்து மார்க்கெட்டுகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை