உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எம்.எல்.ஏ.,வுக்கு மருத்துவ பரிசோதனை

 எம்.எல்.ஏ.,வுக்கு மருத்துவ பரிசோதனை

பெங்களூரு: பெங்களூரு பாரதிநகர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். நேற்று காலை, மருத்துவ பரிசோதனையின் போது இதயம் தொடர்பான பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில், நீதிபதி விலக்கு அளித்தார். ஜெயதேவா இதய மருத்துவமனையில், மூத்த டாக்டர் முன்னிலையில், முழு மருத்துவ பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இன்று மருத்துவ பரிசோதனைக்கு பின், நீதிபதி வீட்டில் அவரை ஆஜர்படுத்த உள்ளனர். போலீஸ் காவலா அல்லது சிறையா என தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !