உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மார்ச் 22ல் சென்னையில் கூட்டம்: சித்தராமையா பங்கேற்கவில்லை

மார்ச் 22ல் சென்னையில் கூட்டம்: சித்தராமையா பங்கேற்கவில்லை

பெங்களூரு: லோக்சபா தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மார்ச் 22ல் சென்னையில் நடக்க உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில், பங்கேற்கவில்லை என அறிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, தனக்கு பதில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கலந்து கொள்வார் எனக்கூறியுள்ளார்.லோக்சபா தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு குறைவு உள்ளிட்ட விவகாரங்களை தேசிய அளவில் எடுத்து செல்வதற்கு, தென் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை இணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்து, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக, தென் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக, பிற மாநில முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு அழைக்க, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.நேற்று, பெங்களூரு சென்ற அமைச்சர் பொன்முடி தலைமையிலான குழுவினர், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை சந்தித்து ஸ்டாலினின் கடிதத்தை அளித்தனர்.இந்நிலையில், ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் சித்தராமையா கூறியுள்ளதாவது: உங்களின் கடிதம் கிடைக்கப்பெற்றேன். இது நமது அரசியலை நிர்வகிக்கும் கொள்கைகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் மாநிலங்களின் சுயாட்சி பற்றிய மிக முக்கியமான பிரச்னைகளை எழுப்புகிறது. குறிப்பாக மக்கள் தொகை அடிப்படையில், லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகள் மறுவரையறை விஷயம். இந்த விஷயம் குறித்த ஒரே எண்ணம் கொண்ட மாநிலங்கள் விரிவாக விவாதிக்க வேண்டும். இந்த கூட்டத்தில் பங்கேற்க நான் விரும்பினாலும் முன்னரே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக என்னால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.இருப்பினும், 22ம் தேதி நடக்கும் இந்த கூட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரரை கேட்டுக் கொண்டு உள்ளேன். இவ்வாறு அந்த கடிதத்தில் சித்தராமையா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

vbs manian
மார் 14, 2025 09:53

மேகதாது விவகாரம் மறந்து விட்டதோ மறைந்து போனதோ.


எவர்கிங்
மார் 14, 2025 08:55

சித்தராமைய்யாவுக்கு கொஞ்சம் அறிவு இருக்கு


saravan
மார் 14, 2025 08:15

மக்களே, உண்மையான நாட்டுப் பற்று இருக்கும், சகோதர சகோதரிகளே, ஒன்றுபடுவீர்...இனியும் ஏமாறாதீர்... அடுத்த 5 ஆண்டுகளுக்கும் இதுபோன்ற வெற்று வீர வசனங்கள் வேண்டுமா? இல்லை கேரளா, குஜராத், ஆந்திரா, ஒடிசா, போன்று உண்மையான மாநில வளர்ச்சி வேண்டுமா? சிந்திப்பீர்... நேர்மையான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பீர்...தீபாவளிக்கு வாழ்த்து கூட சொல்லாத முதல்வர் தேவையா...தக்க பாடம் புகட்டுங்கள்...


S.V.Srinivasan
மார் 14, 2025 07:53

வரவேண்டாம் சித்து உங்களுக்கு வேற வேலை இருந்தா பாருங்க.


raja
மார் 14, 2025 07:03

இது போல மேக தாட் அணை விசயத்துக்கு கடிதம் எழுதி எம் தமிழருக்கு துரோகம் இழைகாதிர் என்று ஆணை இட்டு இருக்கலாம்...


Svs Yaadum oore
மார் 14, 2025 06:46

சித்தர் பங்கேற்கவில்லையாம். விடியலுக்கு அவ்வளவுதான் மரியாதை... அழைப்பு தாம்பூலம் கொடுக்க விழுப்புரத்தை அனுப்பினால் அவனுங்க கனக்பூரை திருப்பி அனுப்புறானுங்க ...


Svs Yaadum oore
மார் 14, 2025 06:41

இந்த கர்நாடக துணை முதல்வர் ப ஜா க வுடன் கள்ள தொடர்பாம் .....உள்ளடி வேலை பார்த்து விடியலுக்கு உலை வச்சுட போறாரு ....


Svs Yaadum oore
மார் 14, 2025 06:39

அப்படியே விடியல் கர்நாடக துணை முதல்வரிடம் மேகதாது அணை பற்றி பேசட்டுமே ....தமிழன் உரிமைகளை அடகு வைக்கும் விடியல் ....தமிழ் தமிழன் தமிழன்டா ...


V K
மார் 14, 2025 05:33

பார்த்து யா உன் வீட்டில் அன்று ரெய்டு வர போகுது ஆயிரும் கோடி அச்சே


Kasimani Baskaran
மார் 14, 2025 03:58

சுய லாபத்துக்காக திராவிட மொழிக்குடும்பத்தில் ஒருவனும் மும்மொழித் திட்டத்துக்கு எதிர்ப்பான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. கண்டிப்பாக தீம்க்காவை தனிமைப்படுத்துவார்கள் என்று நம்பலாம். ஹிந்தி திணிப்பு என்று ஆரம்பித்து திராவிடக்கோஷ்டி மும்மொழி எதிர்ப்பு என்று ஒரு திகிலில் புலிவாலைப்பிடித்து விடமுடியாமல் தவிப்பது தெரிகிறது.


புதிய வீடியோ