21ல் தங்கவயலில் மெகா மருத்துவ முகாம்
தங்கவயல்: கோலார் மாவட்ட த.வெ.க., தலைவர் வி.கதிர், செயலர் வி.கலை ஆகியோர் கூறுகையில், 'தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, மக்களின் நலனுக்காக, ராபர்ட்சன் பேட்டை அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில், இம்மாதம் 21ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, 'மெகா மருத்துவ முகாம்' நடக்கிறது. இதய டாக்டர் அறிவழகன் தலைமையில் நடக்கும் முகாமில், செட்டிநாடு மருத்துவமனை, நாராயணா ஹெல்த் கேர், கோலார் ஆர்.எல்.ஜாலப்பா மருத்துவமனையினர் சிகிச்சை அளிக்கவும், ரத்த தான முகாம் நடத்தவும் முன் வந்துள்ளனர். தேவையுள்ளோர், இம்முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்' என்றனர்.