உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மெட்ரோ கட்டண உயர்வு: 16 பேர் மீது வழக்கு

மெட்ரோ கட்டண உயர்வு: 16 பேர் மீது வழக்கு

பெங்களூரு: பெங்களூரில் போக்குவரத்தை குறைப்பதில் மெட்ரோ ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, மெட்ரோ ரயிலின் டிக்கெட்டுகள் விலைகள் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.இதனால் பயணியர் கடும் அதிருப்தி அடைந்தனர் மற்றும் மெட்ரோவில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்தது.கட்டண உயர்வை கண்டித்து கன்னட அமைப்பினர், பயணியர், அரசியல் கட்சிகள் என, பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர்.கடந்த வெள்ளிக்கிழமை ஏ.பி.வி.பி., எனும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் எனும் வலதுசாரி மாணவ அமைப்பினர், கெம்பே கவுடா மெட்ரோ ரயில் நிலையத்தில் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர்.போராட்டத்தால் ரயில் நிலையத்திற்கு வந்த பயணியர் பாதிகப்பட்டனர். இதுகுறித்து, காட்டன்பேட்டை போலீசார் விசாரித்தனர்.ஏ.பி.வி.பி., அமைப்பினர் உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால், அந்த அமைப்பை சேர்ந்த 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
பிப் 16, 2025 12:18

போராட்டம் செய்தவர்களில் பலபேர் மெட்ரோ ரயில்களில் பயணித்திருக்கவே மாட்டார்கள். ஏதோ ஒரு அரசியல்கட்சியின் தூண்டுதலால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்காக கட்டண உயர்வை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. ஐம்பது சதவிகித உயர்வு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஒரு இருபது சதவிகிதம் ஏற்றலாம்.