உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நாளை அதிகாலை 5:00 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை துவக்கம்

 நாளை அதிகாலை 5:00 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை துவக்கம்

பெங்களூரு: பெங்களூரில், நாளை மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதால், மெட்ரோ ரயில் சேவை அதிகாலை, 5:00 மணிக்கு துவங்க உள்ளது. கர்நாடகா மாநில போலீஸ் ரன் எனும் தலைப்பில், பெங்களூரில் நாளை மாரத்தான் போட்டி நடக்கிறது. மாநில போலீசார், எஸ்.பி.ஐ., வங்கியுடன் இணைந்து மாரத்தான் போட்டியை நடத்துகின்றனர். போதைப்பொருள் விழிப்புணர்வை மையப்படுத்தி நடக்கும் போட்டியில், ஆயிரக்கணக்கில் வீரர், வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர். இதனால், ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக காலை, 7:00 மணிக்கு துவங்கும் மெட்ரோ ரயில் சேவை; அதிகாலை, 5:00 மணிக்கே துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மஞ்சள், ஊதா, பச்சை ஆகிய மூன்று வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை, 5:00 மணிக்கே துவங்கும். அதிகாலையில் நகரம் முழுதும், தடையற்ற பொதுப்போக்குவரத்து இணைப்பை உறுதி செய்யவும், ஓட்டப்பந்தய வீரர்கள், பார்வையாளர்களுக்கு தொந்தரவு இல்லாத இயக்கத்தை எளிதாக்குவதே, ரயில் சேவை மாற்றத்திற்கான காரணம் என, மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல, ஆர்.வி., ரோடு முதல் பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் வழித்தடத்தில், 8வது மெட்ரோ ரயில் நேற்று முதல் சேவைக்கு வந்தது. இதனால், பரபரப்பான நேரங்களில் ரயில், 9 நிமிட இடைவெளியில் இயங்கும். இது, பயணியரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை