மெட்ரோ ரயில்கள் இயக்கம் ஐ.பி.எல்.,லுக்காக நீட்டிப்பு
பெங்களூரு: ஐ.பி.எல்.,லின் இறுதி கட்ட போட்டிகள் மீண்டும் துவங்குவதால், பொது மக்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் போக்குவரத்து நேரம் விஸ்தரிக்கப்படுகிறது.இது குறித்து பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரின் சின்னச்சாமி விளையாட்டு அரங்கில், மே 17 மற்றும் மே 23ல் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்கிறது. போட்டிகளை காண அதிக எண்ணிக்கையில் பொது மக்கள் வருவர். இவர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் போக்குவரத்து நேரம் விஸ்தரிக்கப்படுகிறது.கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில், ஒயிட் பீல்டு, செல்லகட்டா, சில்க் போர்டு, மாதவரா மெட்ரோ நிலையங்களில் இருந்து, ரயில் போக்குவரத்து சேவை நள்ளிரவு 1:00 மணி வரை விஸ்தரிக்கப்படும்.மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, நான்கு திசைகளுக்கும் இறுதி ரயில் நள்ளிரவை தாண்டி 1:35 மணிக்கு புறப்படும். பயணியர் இச்சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.