பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோ ரயில்கள் இயங்காது
பெங்களூரு: 'மெட்ரோ ரயிலில் ஊதா வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக, நாளை, இரண்டு மணி நேரம் மெட்ரோ ரயில்கள் இயங்காது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: செல்லகட்டா முதல் ஒயிட் பீல்டு வரையிலான ஊதா நிற வழித்தடத்தில், நாளை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், நாளை காலை 7:00 மணி முதல், காலை 9:00 மணி வரை ஸ்ரீபாலகங்காதரநா சுவாமிஜி நிலையம் - கப்பன் பார்க் மெட்ரோ நிலையங்கள் இடையே ரயி ல்கள் இயக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.