உடுப்பி அருகில் மினி படகு சவாரி
: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் படகு சவாரி செய்வது பிடிக்கும். அதுவும்: உடுப்பியில் இருந்து 22 கி.மீ., தொலைவில் சாலிகிராமம் உள்ளது. அமைதியான கிராமத்தில் சீதா ஆற்றில், 'கயாகிங்' எனும் மினி படகு சவாரி சேவை உள்ளது. இந்த படகுகளை துடுப்பு போட்டு நாமே தான் ஓட்டி செல்ல வேண்டும். ஒரு படகில் இருவர் பயணிக்கலாம். சதுப்பு நில காடுகளுக்கு நடுவில் படகில் பயணிக்கலாம். இந்த பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை தரும். குறிப்பாக, படகு சவாரியின் போது சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது பிரமிப்பை ஏற்படுத்தும். இதை, மொபைல் போன்களில் படம் பிடித்து மகிழலாம். படகு பயணத்தின் போது, நண்டு, மீன், பறவைகள் ஆகியவற்றை ரசிக்கலாம். இங்கு போட்டோ ஷூட் செய்யவும் அனுமதி உண்டு.
Galleryபடகில் பயணிப்போர், 'லைப் ஜாக்கெட்' கட்டாயம் அணிய வேண்டும். காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, அனைத்து நாட்களிலும் படகு சவாரி மேற்கொள்ளப்படும். ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. படகு சவாரியின் போது டி - ஷர்ட், டவுசர் அணிவது நல்லது. மேலும், பணம், அதிக விலை மதிப்புடைய உபகரணங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள், குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க சிறப்பான இடமாக இருக்கும். படகு சவாரியை முடித்தவுடன், ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஹோட்டல்களில் சாப்பிடலாம். அங்கு கிடைக்கும் சூடான மீன்களின் சுவை அருமையாக இருக்கும். குடும்பத்துடன் சாப்பிடுவது சுகமாக இருக்கும். சதுப்பு நில காடுகளுக்கு நடுவில் படகு சவாரி செய்வது புதிய அனுபவத்தை தரும். இதை, அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. - நமது நிருபர் -