உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வாயை மூடும்படி கார்கே அறிவுரை; அமைச்சர் மது பங்காரப்பா தகவல்

வாயை மூடும்படி கார்கே அறிவுரை; அமைச்சர் மது பங்காரப்பா தகவல்

கதக் : ''முதல்வர் மாற்றம் குறித்து அனைவரும் வாயை மூடும்படி கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தி உள்ளார்,'' என, மாநில கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.கதக்கில் அவர் நேற்று அளித்த பேட்டி:முதல்வர் மாற்றம் குறித்த விவகாரத்தில், மாநிலத்தில் மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நேரத்தில் இதுகுறித்து யாரும் கருத்துத் தெரிவிக்காமல், வாயை மூடிக்கொண்டு இருக்கும்படி கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தி உள்ளார். இவ்விவகாரம் குறித்து எனக்கு தெரியாது; இது தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்.பா.ஜ.,வினருக்கு வேறு வேலையே இல்லை. 'வாக்குறுதி திட்டம் நிறுத்தப்படும்' என்று இன்னும் மூன்று ஆண்டுகளும் அவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பர். இதனால் எரிச்சலடையும் வாக்காளர்கள், பா.ஜ.,வினர் முகத்தில் துப்புவர். அப்போது தான் அவர்களுக்கு புரியும்.எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் யாரும் வாக்குறுதி திட்டத்தை எதிர்க்கவில்லை. சில ஊடகங்கள் மாற்றி எழுதுகின்றன. நாங்கள் ஒன்றை சொன்னால், ஊடகத்தினர் வேறொன்றை எழுதுகிறீர்கள். முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ ராயரெட்டி, வாக்குறுதி திட்டத்தை எதிர்க்கவில்லை என்று அவரே கூறியுள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக கருத்து சொல்லும் அனைவரையும் தடை செய்வது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை