உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கோலாரில் கோஷ்டி சேர்க்கவில்லை அமைச்சர் முனியப்பா உருக்கம்

கோலாரில் கோஷ்டி சேர்க்கவில்லை அமைச்சர் முனியப்பா உருக்கம்

கோலார்: ''கோலார் மாவட்ட காங்கிரசில் எனக்கென்று ஒரு கோஷ்டியும் இல்லை,'' என, மாநில உணவு மற்றும் குடிமைப் பொருட்கள், நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா தெரிவித்தார்.கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கோமுல் எனும் கோலார் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இயக்குநர் தேர்தலில் பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமி, காங்கிரஸ் எஸ்.சி., பிரிவுத் தலைவர் பிரசாத் பாபுவின் மனைவி மஹாலட்சுமி உட்பட காங்கிரஸ் ஆதரவாளர்கள் 9 பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும்; விவசாயிகளுக்காக வேலையை செய்யட்டும். கோமுல் தலைவர் பதவிக்காக கோஷ்டி சேர்க்கவில்லை. என்னை சந்தித்தவர்களுடன் பேசினேன். பெரும்பாலான பலம் உள்ளவர், தலைவர் ஆகியுள்ளார். அதிகாரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, நிர்வாகத்தை அவர் நடத்த வேண்டும்.கோலார் மாவட்டத்தில் எனக்கென தனி கோஷ்டி எதுவும் கிடையாது. காங்கிரசே என் பலம். நான், இந்த தேர்தலில் போட்டியிடவில்லையே. அப்படி இருக்கும்போது, அணி என்று எப்படி சொல்ல முடியும்?கோலார்- - சிக்கபல்லாப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் தேர்தலில், என் மகளான, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா போட்டியிடுவாரா என்பது பற்றி அவரிடமே கேளுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ