உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விஜயை தி.மு.க., ஆதரிக்க வேண்டும் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கருத்து

 விஜயை தி.மு.க., ஆதரிக்க வேண்டும் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கருத்து

பெங்களூரு: ''விஜய் கட்சியை தி.மு.க., ஆதரிக்க வேண்டும்,'' என்று, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கருத்து தெரிவித்து உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில் முதல்வர் பதவி விவகாரத்தில், நீண்ட காலமாக குழப்பம் நில வுகிறது. இதை அப்படியே விட்டு விட கூடாது. சித்தராமையா, சிவகுமாரை டில்லிக்கு அழைத்து மேலிடம் பேச வேண்டும். தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும். தாவணகெரேயில் காங்கிரஸ் வெற்றி பெற சிறுபான்மை சமூக ஓட்டுகள் கை கொடுத்து உள்ளது. ஷிகாவியிலும் இதே பாணியில் வெற்றி பெற்றோம். வரும் 2028 தேர்தலுக்காக சிறுபான்மை சமூகத்தினரை ஒருங்கிணைக்கும் சவாலான பணியை செய்து வருகிறோம். தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. அதற்குள் எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும். கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட, முஸ்லிம் தலைவர்கள் அப்துல் ஜப்பார், நசீர் அகமதுவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. அவர்களுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை. விஜய் மதச்சார்ப்பற்ற அரசியல் செய்ய போவதாக கூறி உள்ளார். அவர் நினைத்து இருந்தால் பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு சென்று இருக்கலாம். இ தனால், மதச்சார்ப்பற்ற கட்சிகள் குறிப்பாக தி.மு.க.,வும், விஜய் கட்சியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை