உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிவகுமார் முதல்வராக வேண்டும் எம்.எல்.ஏ., ரங்கநாத் கருத்து

சிவகுமார் முதல்வராக வேண்டும் எம்.எல்.ஏ., ரங்கநாத் கருத்து

பெங்களூரு: குனிகல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி: கட்சியில் குழப்பம் ஏற்படும் வகையில், யாரும் பேசக்கூடாது. சில விஷயங்களில், எனக்கும் அதிருப்தி உள்ளது. நான் நான்கு சுவர்களின் மத்தியில் அமர்ந்து, தலைவர்களுடன் பேச்சு நடத்தி, என் அதிருப்தியை விவரித்து, அனைத்தையும் சரி செய்து கொள்வேன். முன்னாள் அமைச்சர் ராஜண்ணா, எங்கள் மாவட்டத்தின் மூத்த தலைவர். அவர் வேறு கட்சிகளுக்கு சென்று வந்திருக்கலாம். ஆனால் அவர் பா.ஜ.,வுக்கு செல்வது குறித்து முடிவு செய்யவில்லை. அவரை பற்றி பேசும் அளவுக்கு, நான் பெரியவன் அல்ல. கட்சி மேலிடத்துக்கு எதிராக பேசியதால், ராஜண்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினர். அவரை அமைச்சராக்கியதும் மேலிடம் தான். ராஜேந்திரா பெரிய அரசியல்வாதி. அவரை பற்றி பேசும் அளவுக்கு, நான் மூத்தவன் அல்ல. அவர் எம்.எல்.சி., தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு ஆதரவாக நானும் பணியாற்றினேன். துணை முதல்வர் சிவகுமார், முதல்வராக வேண்டும் என்பது, தொண்டர்களின் விருப்பம். இதில் அர்த்தம் உள்ளது. சிவகுமார் முதல்வர் ஆவார் என, நானும் கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை