உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நரேந்திரசாமிக்கு அமைச்சர் பதவி எம்.எல்.ஏ., ரவி கனிகா கோரிக்கை

நரேந்திரசாமிக்கு அமைச்சர் பதவி எம்.எல்.ஏ., ரவி கனிகா கோரிக்கை

மாண்டியா: “மலவள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நரேந்திரசாமிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்,” என, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கனிகா கோரிக்கை விடுத்துள்ளார். மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி: காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களால் மக்கள் பயன்பெறுவதை, பா.ஜ.,வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அரசுக்கு எப்படியாவது கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். கெரேகோடுவில் ஹனுமன் கொடி பிரச்னை; நாகமங்களா, மத்துாரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது கல்வீசப்பட்ட சம்பவங்களுக்கு பின், ஹிந்து அமைப்பினரை, பா.ஜ.,வினர் துாண்டி விட்டனர். மாநிலத்தின் அமைதியை சீர்குலைப்பது, ஹிந்துக்கள் பெயரில் அரசியல் செய்வது தான் பா.ஜ., தலைவர்களுக்கு தெரியும். அமைச்சரவையில் எப்போது மாற்றம் நடக்கும் என்று எனக்கு தெரியாது. தங்களுக்கு கொடுத்த துறையை திறம்பட நிர்வகிக்கும் அமைச்சர்கள் பதவியில் தொடர்வர். திறமையற்ற அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மாண்டியாவின் மலவள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நரேந்திரசாமி மூத்த தலைவர். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். மாண்டியா பொறுப்பு அமைச்சராக உள்ள செலுவராயசாமி, விவசாய அமைச்சராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். நரேந்திரசாமிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக, செலுவராயசாமியிடம் இருந்து அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. மாண்டியாவுக்கு கூடுதலாக ஒரு அமைச்சர் பதவி கொடுப்பதில் என்ன தவறு உள்ளது? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை