உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரூ.3 கோடி மொபைல் போன்கள் மீட்பு

 ரூ.3 கோடி மொபைல் போன்கள் மீட்பு

விஜயபுரா: விஜயபுரா எஸ்.பி., லட்சுமண் நிம்பரகி நேற்று அளித்த பேட்டி: விஜயபுரா மாவட்டத்தில், சமீப காலமாக மொபைல் போன்கள் திருட்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக விலை உயர்ந்த போன்களை, திருடர்கள் குறி வைத்து திருடுகின்றனர். திரு டு போன மொ பைல் போன்களை கண்டுபிடிக்க, சி.இ.ஐ.ஆர்., எனும், ' சென்ட்ரல் எக் விப்மென்ட் ஐடென்டிடி ரிஜிஸ்டர்' என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆறு மாதங்களில், 340 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் மதிப்பு மூன்று கோடி ரூபாய். மீட்கப்பட்ட மொபைல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. திருடப்பட்ட மொபைல் போன்களை கண்டுபிடிக்க, மத்திய அரசு செயல்படுத்திய புதிய தொழிற்நுட்பம் உதவியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை