உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விநாயகர் சிலை கரைப்புக்கு நடமாடும் டேங்கர்கள் தயார்

விநாயகர் சிலை கரைப்புக்கு நடமாடும் டேங்கர்கள் தயார்

பெங்களூரு: விநாயகர் சிலைகளை கரைக்க, பெங்களூரு நகரில் 41 ஏரிகளின் வளாகத்தில் தற்காலிக குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 489 நடமாடும் டேங்கர்கள் தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவ் கூறியதாவது: சாலைகளில் விநாயகர் சிலை அமர்த்தி, பண்டிகை கொண்டாட அனுமதி பெற, 75 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு பொதுமக்கள் அனுமதி பெறலாம். விநாயகர் சிலைகளை கரைக்க, பெங்களூரின் 41 ஏரி வளாகங்களில், தற்காலிக குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகரின் 489 நடமாடும் டேங்கர்கள் தயார் நிலையில் உள்ளன.அனைத்து வார்டுகளிலும், டேங்கர்கள் கிடைக்கும். விநாயகர் சிலை கரைப்பை மேற்பார்வையிட, நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜராஜேஸ்வரி நகர் மண்டலத்தின், ஹேரோஹள்ளி ஏரியின் குளத்தில், ஆண்டுதோறும் விநாயகர் சிலை கரைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இம்முறை சில காரணங்களால், இங்கு சிலை கரைப்புக்கு அனுமதி அளிக்கவில்லை. எடியூர் ஏரியில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. 27 முதல் செப்டம்பர் 17 வரை, பொது மக்கள் சிலைகளை கரைக்கலாம். ஆனால் களிமண் அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சிலைகளை மட்டும் கரைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை