உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குடும்ப பிரச்னையால் தாய், மகள் தற்கொலை

குடும்ப பிரச்னையால் தாய், மகள் தற்கொலை

மாண்டியா: ஒரே மின் விசிறியில் துாக்கிட்டு, தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்டனர்.மாண்டியா நகரின், கிருகாவலு கிராமத்தை சேர்ந்தவர் ரஷ்மி, 28. இவருக்கும் ராம்நகர் சென்னப்பட்டணாவை சேர்ந்த ராஜு, 32, என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு திஷா, 9, என்ற மகள் உள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன்பு, தம்பதி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இருவரும் தனித்தனியாக வசிக்கின்றனர். ரஷ்மி தன் மகளுடன், மாண்டியா நகரின், நேரு லே - அவுட்டில் வசித்து வந்தார்.மகள் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று மதியம், தாயும், மகளும் ஒரே மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். குடும்ப பிரச்னையே இவர்களின் தற்கொலைக்கு காரணம் என, கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த மாண்டியா நகர் போலீசார், தாய், மகளின் உடல்களை மீட்டனர். வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை