மேலும் செய்திகள்
மூன்று மகள்களுடன் தாய் மாயம்
15-May-2025
சிக்கபல்லாபூர்: ஏரியில் இரண்டு குழந்தைகளுடன் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.சிக்கபல்லாபூர் நகரின் பாதகானஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஜெயண்ணா, 35. இவரது மனைவி லாவண்யா, 30. தம்பதிக்கு நிஹாரிகா, 10, நேஹா, 6, என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். ஜெயண்ணா கிடைத்த வேலைகளை செய்து, பிழைப்பு நடத்தினார். இவரை நல்ல வேலையில் அமரும்படி, மனைவி வலியுறுத்தினார்.மகள்களை நன்றாக வளர்க்க வேண்டும். நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து, நல்ல எதிர்க்காலத்தை ஏற்படுத்த வேண்டும். விமான நிலையத்துக்கு கார் ஓட்டுநராக செல்லும்படி நச்சரித்தார். இதற்கு ஜெயண்ணா சம்மதிக்கவில்லை. இதனால், தம்பதிக்கிடையே அவ்வப்போது, வாக்குவாதம் நடந்துள்ளது.நேற்று முன் தினம் மாலையும், இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் இரண்டு மகள்களையும் உடன் அழைத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறிய லாவண்யா, மீண்டும் வீடு திரும்பவில்லை. கலக்கமடைந்த ஜெயண்ணா பல இடங்களில் தேடியும் மனைவி, மகள்களை காணவில்லை.சிக்கபல்லாபூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரணை நடத்தி, தாய் மற்றும் மகள்களை தேடி வந்தனர்.இந்நிலையில் பாதகானஹள்ளி கிராமத்தின் அருகில் உள்ள, ரங்கஸ்தலம் கிராமத்தின் ஏரியில் நேற்று மதியம் லாவண்யா, அவரது இரண்டு மகள்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.தகவலறிந்து அங்கு வந்த போலீசார், ஏரியில் இருந்து மூவரின் உடல்களையும் வெளியே எடுத்தனர். இது குறித்து, வழக்குப் பதிவாகியுள்ளது.
15-May-2025