உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மைசூரு சாண்டல் சோப் துாதர் நடிகை தமன்னாவுக்கு எதிர்ப்பு

மைசூரு சாண்டல் சோப் துாதர் நடிகை தமன்னாவுக்கு எதிர்ப்பு

ராஜஸ்தான் அணியில் விளையாட வாய்ப்பு: கிரிக்கெட் வீரரிடம் ரூ.24 லட்சம் அம்பேல்மைசூரு: 'மைசூர் சோப் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ துாதராக, பன்மொழி நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கன்னடநடிகையை நியமித்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவரை, பல அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் துாதராக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.கர்நாடக அரசு சார்ந்த மைசூர் சோப் அண்ட் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்துக்கு நடிகை தமன்னாவை, புதிய துாதராக நியமித்து, தொழில் மற்றும் வர்த்தக துறை, நேற்று முன்தினம் உத்தரவு வெளியிட்டது. இரண்டு ஆண்டுகள், இவரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக அவருக்கு 6.20 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அரசின் இந்த முடிவுக்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 'மைசூரு சாண்டல் சோப் நிறுவனத்துக்கு, கன்னட நடிகையரில் யாராவது ஒருவரை துாதராக நியமித்திருக்கலாம்.தீபிகா படுகோனே, கர்நாடகாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று பிரபலமானவர். இவரை போன்று கர்நாடகாவை சேர்ந்த பல நடிகையர் உள்ளனர். அவர்களில் யாரையாவது தேர்வு செய்திருக்கலாம்' என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.அதே நேரம், 'தமன்னா பன்மொழி நடிகை. நாடு முழுதும் அவரது பெயர் பிரபலமாக உள்ளது. கிளாமரில் இவரை பின்னுக்கு தள்ள, யாராலும் முடியவில்லை. இதே காரணத்தால் அவரை, 'மில்கி பியூட்டி' என, அழைக்கின்றனர். அவரை மைசூர் சோப் அண்ட் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்துக்கு, துாதராக நியமித்து கொண்டால், இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை மற்றும் செல்வாக்கை மேலும் அதிகரிக்கலாம் என்பது, அரசின் எண்ணமாக இருக்கும்' என, பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை